Jun 16, 2018 06:18 AM

பிரபு தேவா மீது நஷ்ட ஈடு வழக்கு! - போட்டது யார் தெரியுமா?

பிரபு தேவா மீது நஷ்ட ஈடு வழக்கு! - போட்டது யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடன இயக்குநராக இருந்த பிரபு தேவா, தற்போது இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார். பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் அவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், பிரபு தேவா மீது அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளது. 

 

அதாவது, 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் விதத்தில் கடந்த 2.13 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப், பிரபு தேவா ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அமெரிக்க டாலரில் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டதாம்.

 

ஆனால், சல்மான்கான் வழக்கு ஒன்றில் சிக்கியதால் அவர் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத சூழல் இருந்ததால், நிகழ்ச்சியை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை இந்த நடிகர், நடிகைகள் அந்த தனியார் நிறுவனத்திற்கு நிகழ்ச்சி நடத்தி கொடுக்காததோடு, வாங்கிய அட்வான்ஸ் தொகையையுக் திருப்பி தர வில்லையாம்.

 

இதற்கிடையே, வேறு ஒரு நிறுவனம் நடத்தும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இவர்கள் அமெரிக்கா செல்ல இருக்கிறார்களாம். இதை அறிந்த அந்நிறுவனம், அமெரிக்காவின் சிக்காக்கோ நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

 

தங்களை ஏமாற்றிய இந்த நடிகர், நடிகைகள் நஷ்ட்ட ஈடாக 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் தர வேண்டும், என்று தங்களது மனுவில் தனியார் நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.