Jul 19, 2018 11:02 AM

பிரியங்காவின் கணவர் மீது போலீசில் புகார்! - பிரேத பரிசோதனைக்கு குடும்பத்தார் தடை

பிரியங்காவின் கணவர் மீது போலீசில் புகார்! -  பிரேத பரிசோதனைக்கு குடும்பத்தார் தடை

’வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா, நேற்று முன் தினம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணம் தொலைக்காட்சி ஏறியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே, பிரியங்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும், இருவரும் கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தை இல்லாத காரணத்தால் தான் பிரியங்கா தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

 

பிரியங்காவுக்கு உறவினர்கள் என்று சென்னையில் யாரும் இல்லை, அனைவரும் மதுரையில் தான் இருக்கிறார்கள். அதனால் அவரது உறவினர்கள் யாராவது கையெழுத்து போட்டால் தான் பிரதே பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். நேற்று வரை அவரது உறவினர்கள் யாரும் வராததால் பிரதே பரிசோதனை நடைபெறவில்லை.  இதையடுத்து நேற்று மாலை பிரியங்கா உறவினர்கள் மதுரையில் இருந்து வந்ததால், இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

Priyanka

 

இந்த நிலையில், பிரியங்காவின் கணவர் அருண் மீது போலீசில் புகார் அளிக்க பிரியங்காவின் குடும்பத்தார் முடிவு செய்திருப்பதால், பிரதே பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறி வருகிறார்களாம். இதனால், இன்னும் பிரியங்காவில் உடல் பிரேத பரிசோதனை செய்யாமல், சென்னை ராயபேட்டை மருத்துவமனையில் தான் இருக்கிறது.

 

அதே சமயம், பிரியங்காவுடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகைகள் சிலர், அவரது கணவர் அருண் நல்லவர் அவருக்கும் பிரியங்காவின் தற்கொலைக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது, பிரியங்கா ஏதோ ஒரு கோபத்தில் இப்படி செய்துக் கொண்டார், என்று அவரது உறவினர்களிடம் சமரசம் பேசியிருக்கிறார்களாம்.

 

அதனால், இன்று எப்படியும் பிரியங்காவின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு வரும் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. மேலும், பிரியங்காவின் உடல் மருதுரைக்கு எடுத்துச் செல்லப்படாமல் சென்னையில் வைத்தே அவரது உறுதிச்  சடங்கை செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம்.

 

Priyanka

 

மொத்தத்தில், பிரியங்காவின் உடலை பெற்று அவருக்கு முறையாக இறுதிச் சடங்கு செய்வதில் அவரது உறவினர்கள் மும்முரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.