Feb 20, 2018 12:37 PM

ரூ.6.2 கோடியை திருப்பி தர வேண்டும் - லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ரூ.6.2 கோடியை திருப்பி தர வேண்டும் - லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான‘கோச்சடையான்’ மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதனால், அப்படத்தை தயாரித்த ரஜினிகாந்தின் மனைவி லதா கடனாளியானார். 

 

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா இயக்கிய இப்படத்திற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் இருந்து லதா ரஜினிகாந்த், ரூ.10 கடன் வாங்கியிருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ.1.5 கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8.5 கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்திடம் நீதிபதிகள், கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள்?, எதற்காக கடனை செலுத்தவில்லை? ஆகிய கேள்விகளை கேட்டதோடு, அந்த கேள்விக்கான மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் கூறினார்கள்.

 

உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில், ரூ.6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.