Jun 15, 2018 01:02 PM

வருமான வரித்துறை வழக்கில் இருந்து எஸ்கேப் ஆன திரிஷா!

வருமான வரித்துறை வழக்கில் இருந்து எஸ்கேப் ஆன திரிஷா!

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக இருக்கும் நடிகை திரிஷா, கடந்த 2010-11 ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த வருமான வரித்துறை அவர் ரூ.3.52 கோடி வருமான ஈட்டியதாக கூறியதோடு, பொய்யான கணக்கை சமர்ப்பித்ததால் அவருக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது.

 

எதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிஷா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வருமான வரித்துறை ரத்து செய்தது.

 

இதையடுத்து, வரிமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டதோடு, திரிஷா ரூ.3.52 கோடி வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

 

இதன் மூலம் வருமான வரித்துறை வழக்கில் இருந்து திரிஷா எஸ்கேப் ஆகிவிட்டார்.