Apr 16, 2018 07:42 AM

ஷங்கர் படத்தில் நடிக்க மறுப்பது ஏன்? - வாய் திறந்த வடிவேலு

ஷங்கர் படத்தில் நடிக்க மறுப்பது ஏன்? - வாய் திறந்த வடிவேலு

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாக இருந்த ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்படத்திற்கான செட் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டார்.

 

மேலும், வடிவேல் நடிக்க மறுப்பதால் அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியது.

 

இந்த நிலையில், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் தான் நடிக்க மறுப்பதற்கான காரணத்தை நடிகர் சங்கத்திற்கு வடிவேலு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

 

அவர் எழுதிய கடிதத்தில், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த படத்திற்கான பணிகள் முடிவடைந்து விடும். அதுவரையில் வேறு படங்களில் நடிக்க வேண்டாம் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் 2016 டிசம்பர் மாதம் வரை படத்திற்கான தொடக்கப்பணிகள் ஆரம்பமாகவில்லை.

 

கலைத்துறை மற்றும் நடிகர் சங்கத்தின் நலன் கருதி ஒப்பந்த காலத்திற்கு பின்னரும் அந்த படத்தில் நடித்து வந்தேன். எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தால் எனக்கு பொருள் செலவும் மனவேதனையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த ப்டாத்தில் நான் நடிக்க மாட்டேன்.

 

இந்த படத்தில் நடித்தால் வேறு படங்களுக்கான பணியில் பாதிப்பு ஏற்படும். மேலும், நடிகர் சங்கம் என்னை அழைத்து என் தரப்பு வாதங்களை கேட்காமல் எனக்கு கடிதம் அனுப்பியது ஒருதலை பட்சமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.