Dec 16, 2017 09:20 AM

‘பிரம்மா.காம்’ விமர்சனம்

e923aacb6192f83d31df16f256862312.jpg

Casting : Nakul, Sidharth Vibin, Ashna Saveri

Directed By : P. S. Vijayakumar

Music By : Siddharth Vipin

Produced By : Milana karthikeyan

 

சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்படும் நகுல், தனக்கு கிடைத்த வாழ்க்கையை வாழாமல், தனக்கு கிடைக்க வேண்டியது பிறருக்கு கிடைத்து விட்டதே! என்ற புலம்பலோடு வாழ்ந்து வருகிறார். விளம்பர நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக நகுல் இருக்க, அதே நிறுவனத்தில் அவரது உறவினரான சித்தார்த் விபின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஹீரோயின் ஆஷ்னா சாவேரிக்கும் நகுலுக்கும் காதல் ஏற்படுகிறது.

 

இதற்கிடையே, சித்தார்த் விபினுக்கு கிடைத்த பதவி தனக்கு கிடைக்கவில்லையே என்ற கவலையோடு இருக்கும் நகுலின் வாழ்வில் திடீரென்று மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, நகுல் சி.இ.ஓ-வாக மாற, அவரது பதவியில் சித்தார்த் விபின் வருகிறார். அத்துடன், நகுலை காதலித்த ஆஷ்னா சித்தார்த் விபினை காதலிக்க தொடங்குகிறார். இப்படி நகுலின் வாழ்க்கை முற்றிலுமாக மாற, இதுவே அவருக்கு சிக்கலாகி விடுகிறது. இறுதியில் இந்த சிக்கலில் இருந்து நகுல் வெளியே வந்தாரா, இதற்கான காரணம் என்ன, என்பதே ‘பிரம்மா.காம்’ படத்தின் கதை.

 

பேராசை பெரும் நஷ்ட்டம், கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும், என்பதை வித்தியாசமன திரைக்கதையோடு காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

துறுதுறு நடிப்பால் நம்மை கவரும் நகுல், சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கால் கடுப்பேற்றினாலும், தான் ஏற்ற கதாபாத்திரத்தில் நிறைவாக பொருந்துகிறார். ஆஷ்னா சாவேரி தனது பணியை திருப்திகரமாக செய்ய, சித்தார்த் விபின் முழு நடிகராக இப்படத்தில் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்த சித்தார்த் விபின், இப்படத்தில் தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை ரொம்ப நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

 

ஆள் மாறட்டம் கான்சப்ட் தான் படம் என்றாலும், அதற்கு இயக்குநர் பி.எஸ்.விஜயகுமார் அமைத்திருக்கும் திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.

 

மற்றவர்கள் வாழ்க்கையை பார்த்து, தனக்கு இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை, என்று புலம்பாமல், கிடைத்ததை வைத்து சந்தோஷமாக வாழவேண்டும் என்ற மெசஜை பேண்டஸி கலந்து காமெடியாக சொல்லியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.விஜயகுமார், அதில் ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். 

 

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘பிரம்மா.காம்’ பிரமிக்க வைத்திருக்கும்.

 

ஜெ.சுகுமார்