Jul 01, 2018 09:04 AM

‘இட்லி’ விமர்சனம்

326f1b8b420d0b53c29dd18f62ee2366.jpg

Casting : Saranya Ponvannan, Kovai Sarala, Kalbana, Mano Bala

Directed By : R.K.Vidhyadaran

Music By : Hari K.K

Produced By : Appu Movies

 

சரண்யா பொன்வன்னன், கோவை சரளா, மறைந்த கல்பனா என நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘இட்லி’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

திருமணமாகாத கோவை சரளா, மருமகளால் விரட்டப்பட்ட கல்பனா, பேத்தியை ஹாஸ்டலில் படிக்க வைக்கும் சரண்யா பொன்வன்னன், இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இதற்கிடையே, சரண்யா பொன்வன்னனின் பேத்தியின் அறுவை சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் தேவைப்பட, இந்த மூவரும் தங்களது கையில் இருக்கும் பணத்தை தவிர, வெளியில் கொஞ்சம் கடன் வாங்கி 6 லட்ச ரூபாயை ரெடி பண்ணிவிட்டு, அதை வங்கியில் டெப்பாசிட் செய்யும் நிலையில், வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் இவர்களது 6 லட்ச ரூபாயையும் கொள்ளையடித்து வடுகிறார்கள். அதே சமயம், வங்கியில் பணம் செலுத்தி ரிசிப்ட் வாங்குவதற்கு முன்பாகவே இவர்களது பணம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதால், பணத்திற்கு வங்கி பொறுப்பேற்க மறுக்க, பணத்தை பறிகொடுத்த இந்த மூன்று பாட்டிகளும் எப்படியாவது பேத்தியின் அறுவை சிகிச்சைக்கு பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று நினைத்து, தங்களது பணம் பறிபோன வங்கியிலேயே கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.

 

திட்டம் போட்டது போல, மூன்று பேரும் முகமூடி அணிந்து வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும்போது, இவர்களை தீவிரவாதிகளாக போலீஸ் சித்தரிக்க, நிலமை விபரீதமாகிவிடுகிறது. என்ன நடந்தாலும் தங்களது 6 லட்ச ரூபாயை வங்கியில் இருந்து கொள்ளையடிக்காமல் விடப்போவதில்லை என்ற முடிவில் இறங்கும் இந்த மூன்று முதியவர்களும் வங்கியில் பணத்தை கொள்ளையடித்தார்களா இல்லையா, என்பதை காமெடியுடன் சில சோசியல் காஸ்ட் விஷயங்களையும் சேர்த்து சொல்லியிருப்பது தான் ‘இட்லி’ படத்தின் கதை.

 

சின்னத்திரை தொடர்களே சினிமா படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அடுத்த கட்டத்தை எட்டிக்கொண்டிருக்க, இப்படத்தை என்னவோ இயக்குநர் சீரியல் போல எடுத்திருக்கிறார்.

 

சரண்யா பொன்வன்னன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூன்று பேரும் முப்பது பேருக்கு சமம் என்ற ரீதியில் தனி தனியாக நடிப்பில் நவரசத்தையும் காட்டி பாராட்டு பெற்றவர்கள் என்றாலும், இந்த படத்தில் இவர்களது காமெடி ஒரு துளி கூட எடுபடவில்லை.

 

காமெடியாக தொடங்கும் படத்தில் தீவிரவாத ஒழிப்பு போலீசாக எண்ட்ரியாகும் இயக்குநர் வித்யாதரன், சில்ல நல்ல விஷயங்களை பேசியதற்கு பாராட்டினாலும், முழுப்படத்தையும் ரசிக்கும்படி திரைக்கதை அமைக்க தவறிவிட்டார். 

 

இருந்தாலும், படத்தில் வெண்ணிறாடை மூர்த்தி வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கையே ஆட்டம் காண செய்யும் அளவுக்கு சிரிக்க வைக்கிறது. அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் டபுள் மீனிங்காக இருந்தாலும், படம் பார்ப்பவர்கள் தங்களையும் அறியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சினைகள், அவற்றில் இருந்து மீள்வதற்கான வழி, என சமூக பிரச்சினைகள் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் வித்யாதரன், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருப்பதோடு, படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால், படம் ஓரளவிற்காகவது தப்பித்திருக்கும்.

 

மொத்தத்தில், மூன்று முக்கியமான நடிகைகள் இருந்தும் இந்த ‘இட்லி’ வேகவில்லை.

 

ரேட்டிங் 2 / 5