Nov 09, 2018 05:58 AM

’களவாணி மாப்பிள்ளை’ விமர்சனம்

b198aed83c53fdf857c04b32e9c4bd1c.jpg

Casting : Dinesh, Adhithi Menon, Devayani, Anandaraj, Munishkanth

Directed By : Gandhi Manivasagam

Music By : NR Ragunanthan

Produced By : Rajeshwari Manivasagam

 

’அட்ட கத்தி’ தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

வாகனத்திலும், தண்ணீரிலும் கண்டம் என்று ஜோதிடர் சொல்லியதால் சைக்கிள் ஓட்டியதோடு வாகனம் பக்கமே போகாமல் வளரும் ஹீரோ தினேஷ், அதே வாகனத்தின் மூலம் அதிதி மேனனை சந்திப்பதோடு, அவரை காதலிக்கவும் தொடங்குகிறார். அதிதியும் தினேஷை காதலிக்க, இவர்களது காதல் விவகாரம் அதிதியின் அம்மா தேவயானிக்கு தெரிய வருகிறது. தினேஷுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க தேவயானி சம்மதிக்கிறார். 

அதே சமயம், தன்னிடம் சிறு பொய் சொன்னாலும் அவர்களை மன்னிக்க முடியாத குற்றவாளியாக கருதும் தேவயானி, தனக்கு கார் ஓட்ட தெரியும், என்று பொய் சொன்னதற்காக தனது கணவர் ஆனந்தராஜை அடிமையாகவே வைத்திருக்க, தினேஷும் இதே விஷயத்தில் தேவயானியிடம் சிக்கிக்கொள்கிறார். பைக்கே ஓட்ட தெரியாத தினேஷ் கார் ஓட்ட தெரியும் என்று தேவயானியிடம் பொய் சொல்லிவிட்டு, தான் சொன்ன பொய்யை மறைத்து அதிதி மேனனை திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பதும், அதற்கு இடையூறாக பல பிரச்சினைகள் வர, அதை அவர் எப்படி சமாளித்து அதிதி மேனனை கரம் பிடிக்கிறார், என்பது தான் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் மீதிக்கதை.

 

பழைய கதை தான் என்றாலும், புதிய டிரெண்டுக்கு ஏற்றவாறு காமெடி காட்சிகளையும் காதல் காட்சிகளையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் காந்தி மணிவாசகம், குடும்பத்தோடு பார்க்கும் கலகலப்பான படமாக இந்த ‘களவாணி மாப்பிள்ளை’ யை கொடுத்திருக்கிறார்.

 

தினேஷும், அதிதி மேனனும் காதல் மட்டும் இன்றி காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ், சாம்ஸ், முனிஷ்காந்த் ஆகியோரது கூட்டணி செய்யும் காமெடியும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. மேக்கப்பில் மிடுக்காக தோன்றும் தேவயானி, நடிப்பில் மென்மையை கையாண்டிருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவின் பணியும், இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தில் சில குறைகள் இருந்தாலும், இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ்வதற்கான அத்தனை அம்சங்களையும் சேர்த்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் காந்தி மணிவாசகம், பேமிலி ஆடியன்ஸை டார்க்கெட் செய்தே இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பதால், பேமிலியோட பார்ப்பதற்கான சரியான படமாக இந்த ‘களவாணி மாப்பிள்ளை’ உள்ளது.

 

ரேட்டிங் 3/5