Dec 01, 2017 08:01 AM

‘திருட்டுப்பயலே 2’ விமர்சனம்

37830b18017288ad8033b8eeff494b9a.jpg

Casting : Boby Simha, Prasanna, Amla Paul

Directed By : Susi Gaaneshan

Music By : Vidyasagar

Produced By : AGS

 

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், நடிப்பில் வெளியாகியுள்ள ‘திருட்டுப்பயலே 2’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் பாபி சிம்ஹா, அதனாலேயே பலமுறை டிரான்ஸ்பராகிறார். அப்படி ஒரு டிரான்ஸ்பரின் போது அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொள்பவர், தனது காதல் மனைவியுடன் சந்தோஷமாக வாழ கவர்மெண்ட் கொடுக்கும் சம்பளம் போதாமல் தடுமாறுகிறார். நேர்மையாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது, என்ற முடிவுக்கும் பாபி வந்துவிடுகிறார். இதற்கிடையே தனது மேல் அதிகாரியின் உத்தரவின் பேரில் பெரிய மனிதர்களில் போன் உரையாடல்களை ஒட்டு கேட்கும் பாபி சிம்ஹா, அமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் போனை ஒட்டு கேட்பதோடு, அவருக்கு கிடைக்க வேண்டிய லஞ்ச பணம் ரூ.10 கோடியை பறித்துவிடுகிறார். இப்படி தொடர்ந்து பலரின் பேச்சை ஒட்டு கேட்கும் பாபி, அவர்களிடம் இருந்து பணம் பரித்து வருகிறார்.

 

எப்போதும் பேஸ்புக்கும், செல்போன் கையுமாக இருக்கும் அமலா பாலிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகும் பிரசன்னா, திருமணமான பெண்களை தனது பேச்சால் கவர்ந்து பிறகு அவர்களை அடைவதையே வேலையாக செய்ய, அவரது பேச்சை பாபி சிம்ஹா ஒட்டு கேட்கிறார். அப்போது அந்த லைனில் அமலா பால் வாய்ஸ் கேட்க ஷாக்காகும் பாபி சிம்ஹா தொடர்ந்து பிரசன்னாவின் பேச்சை ஒட்டு கேட்டு அவரது நோக்கத்தை தெரிந்துக் கொள்பவர், தனது போலீஸ் படையை வைத்து அவரை வெளுத்து வாங்குகிறார்.

 

பாபி சிம்ஹா செய்யும் ஏமாற்று வேலைகளை தெரிந்துக் கொள்ளும் பிரசன்னா, அதற்கான ஆதாரங்களை திரட்டி அவரது இன்னொரு முகத்தை காவல் துறைக்கு காட்ட முயற்சிப்பதோடு, அமலா பாலயும் அடைய நினைக்கிறார். அவரது முயற்சியில் வெற்றி பெறாரா இல்லையா, பிரசன்னவிடம் இருந்து பாபி சிம்ஹாவும், அமலா பாலும் தப்பித்தார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருப்பது தான் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் மீதிக்கதை.

 

பாபி சிம்ஹா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருப்பவர், தவறு செய்யும் போதும், மற்றவர்களின் பேச்சை ஒட்டு கேட்கும் போதும் எக்ஸ்பிரஷன்களில் அசத்துகிறார். பாபி சிம்ஹாவுக்கு நிகரான வேடத்தில் நடித்திருக்கும் பிரசன்னா, தனது தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார். மொத்தத்தில் இவர்கள் இருவரும் போட்டிபோட்டு நடித்து, சிறந்த திருட்டுப்பயலுக என்று பெயர் எடுத்துள்ளனர்.

 

தூக்கலான கவர்ச்சியோடு ரொமான்ஸ் செய்யும் குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் அமலா பால், பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிடுக்கிறார்.

 

தொழில்நுட்பங்கள் மூலம் வீட்டுக்குள் நுழையும் வில்லன்கள் குறித்து அலசியிருக்கும் இயக்குநர் சுசி கணேஷன், காவல்துறை பற்றி அடிக்கும் கமெண்டுகளும் ரசிக்கும்படி உள்ளது.

 

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் தாளம் போட்டுக்கொண்டே கேட்கும்படி உள்ளது. செல்லதுறையின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓவியம் போல அழகு நிறைந்தவைகளாக உள்ளன.

 

சமூக வலைதள மோகத்தாலும், உழைக்காமல் தவறான முறையில் சொகுசாக வாழ நினைப்பதாலும், ஏற்படும் விளைவுகளை களமாக வைத்துக்கொண்டு திரைக்கதையை சுவராஸ்யமாக அமைத்துள்ள இயக்குநர் சுசி கணேசன் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்ததோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார்.

 

மொத்தத்தில், ‘திருட்டுப்பயலே 2’ பரபரப்பான பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, மக்களுக்கு பாடம் சொல்லும் படமாகவும் உள்ளது.

 

ஜெ.சுகுமார்