Oct 18, 2018 03:10 AM

’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’

c276adaaa9fac8d4d5e818217218ada6.jpg

அரசியல் நிகழ்வுகளை எவருடைய மனதும் புண்படாதபடி நையாண்டி செய்யும் ‘கிச்சன் கேபினட்’நிகழ்ச்சியில் இரண்டு புதிய நகைச்சுவை பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

 

’பச்சைக் கிளி’ என்கிற பெண் மேடைப் பேச்சாளரும், ‘குடை மடக்கி’ என்கிற அவருடைய உதவியாளரும் நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மேடைப் பேச்சு வடிவில் வழங்குகிறார்கள். தேர்ந்த அனுபவமுள்ள எழுத்தாளர்கள் இவர்களுடைய பேச்சுகளை தயாரிக்கிறார்கள். எவரையும் நேரடியாக நையாண்டி செய்யாமல் சிரிப்பும், சிந்தனையும் கலந்த பேச்சாக இருக்க வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

 

கிச்சன் கேபினட் நிகழ்ச்சி இந்த புதிய பகுதியுடன் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10:00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.