Feb 01, 2018 03:28 PM

புதிய தலைமுறையின் ‘நம்மால் முடியும்’

3d63802aa653e62f123c8dfe1a4f1e09.jpg

புதிய தலைமுறை “நம்மால் முடியும்”நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் பல களப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியின் நோக்கமே, தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து தேவையான அடிப்படை வசதியைப் பெற்றிட வழிகாட்டுதலே ஆகும்.ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கும்,இதன் மறுஒளிபரப்பு ஞாயிற்று கிழமை காலை 9:00மணிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

மாற்றத்திற்கான ஊடகப்பணியின் அடையாளமாக தமிழகம் எங்கும் களப்பணியை செய்துவரும் புதியதலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழுவினர் கரூர் மாவட்டம்கிருஷ்ணராயபுரம்தாலுகாவில் உள்ள பஞ்சபட்டி ஏரி.ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு1217 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டது.

 

44 அடி உயரமும் 2 ஆயிரத்து 50 மீட்டர் கொண்ட இந்த ஏரியை நம்பித்தான், ஒத்தபட்டி, கொட்டாம்பட்டி,வேலாயுதம்பாளையம், பஞ்ச பட்டி, அழகாபுரி உள் ளிட்ட 75 கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம்உள்ளது. இந்த ஏரியை மீட்டெடுக்க நம்மால் முடியும் குழுவினர் நூற்றுகணக்கான தன்னார்வலர்களோடு களம் இறங்கி சீரமைக்கும் பணியை செய்துவருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற களப்பணியில் பெங்களூர், சென்னை, நாமக்கல், திருச்சி, வெள்ளக்கோவில் போன்ற பகுதியில் இருந்தும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். சீதாராஜாராம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஏரியின் கட்டுமான அமைப்பை சீரமைக்கும் பணியை செய்தனர். இந்த களப்பணியில் இளையதலைமுறை அமைப்பினர், சபரி பசுமை இயக்கம், ஏரியைவிழித்தெழுப்புவோம் போன்ற பல தன்னார்வ அமைப்புகளும் நம்மால் முடியும் குழுவினரோடு ஒருங்கிணைத்து களப்பணியை மேற்கொண்டனர். விரைவில் முழு அளவில் சீரமைக்க தன்னார்வலர்கள் புதியதலைமுறை நம்மால் முடியும் நிகழ்ச்சி குழுவிற்கு வாட்சப் மூலம் பதிவு செய்யலாம். வாட்சப் எண்: 8754575880.

 

இந்நிகழ்ச்சியை சித்திரவேல் நெறிப்படுத்தி வழங்குகிறார்.