நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியா பகுதியில் மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்த கே.பாக்யராஜ், இன்று திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலன் இன்றி அவர் காலை 7 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் கே.பாக்யராஜின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்த கே.பாக்யராஜ், பல்வேறு திரைப்பட நிகழ்ச்சிகளில் சிரப்பு விருந்தினராக கலந்துகொண்டு வந்த நிலையில், அவரது இந்த திடீர் மரணம் தமிழ் திரையுலகை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா 1983 ஆம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர்.

பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாக்யராஜின் உடலுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் இறுதி சடங்கு நடக்கிறது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

actor and director k bagyaraj deathk bagyaraj deathk bagyaraj passes awayஇயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ் காலமானார்கே பாக்யராஜ் மரணம்
Comments (0)
Add Comment