திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் (C.Beaula Magizh) தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.

வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

மகிழ் புரொடக்‌ஷன் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரிக்கும் இப்படம், இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.

துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.

“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள ‘துரோகம் பழகு’ முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

தக்க்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்,அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் கவரும் படமாக ‘துரோகம் பழகு’ உருவாகியுள்ளது.

tamil movie throgam pazhaguthakshan vijaythrogam pazhaguதக்‌ஷன் விஜய் நடிக்கும் துரோகம் பழகுதமிழ்ப் படம் துரோகம் பழகுதுரோகம் பழகு
Comments (0)
Add Comment