’ஹைக்கூ’ படத்தின் டப்பிங் பணி தொடங்கியது!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி எழுத்து, இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹைக்கூ’. ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் நாயகனாக நடித்த ஏகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நாயகிகளாக ஃபெமினா ஜார் மற்றும் ஸ்ரீதேவி நடிக்கின்றனர்.

இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி, அனைத்து தரப்பினருக்குமான உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாக நெட்ஃபிலிக்ஸ் இதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது. அதன்படி, ‘ஹைக்கூ’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் நேர்மையான உழைப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அதே உற்சாகமும் அர்ப்பணிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் தொடரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ’ஹைக்கூ’ திரைப்படத்தை விரைவில் ரசிகர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தை விரைவில் வெளியிடுவதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகிறோம்” என்றார்.

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.

agaenhaikuhaiku dubbing work starttamil movie haikuஏகன்தமிழ்ப் படம் ஹைக்கூஹைக்கூஹைக்கூ டப்பிங் பணிகள் தொடங்கியது
Comments (0)
Add Comment