பயங்கரமான திகில் காட்சிகள் மூலம் கதிலங்க வைக்க வரும் ‘கருப்பட்டி’!

திகில் படங்கள் என்றாலே நகைச்சுவைப் பாணியிலான படங்களாகிவிட்ட தற்போதைய காலக்கட்டத்தில் ஹாலிவுட் ஹாரார் படங்களுக்கு நிகராக மிரள வைக்கும் படங்கள் திகில் படங்கல் தமிழ் சினிமாவில் வராதா…!, என்ற ஏக்கம் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய ஏக்கத்தை போக்கும் விதமாக உருவாகியிருக்கும் படம் ‘கருப்பட்டி’.

கொளத்தூர் என்ற கிராமத்தில் கதையின் நாயகனான கருப்பட்டி என்ற பார்த்திபன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான் . திரு மணம் முடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் இறக்கிறாள் . அதன் பிறகு பவானி ஆவியாக மாறி அனைவரையும் மிரட்டுகிறாள். இதை அறிந்து கொண்ட கருப்பட்டி அவளை கொலை செய்தது யார்? எப்படி அவள் இறந்தாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அப்பொழு அவன் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மம் மற்றும் திகில் நிறைந்தவையாக இருப்பதோடு, பார்வையாளர்கள் இதுவரை அனுபவிக்காத திரை மிரட்சியாக இருப்பது தான் ‘கருப்பட்டி’ படம்.

மோனிதா மூவிஸ் தயாரிப்பில், விஜயராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் ’கருப்பட்டி’ படத்தில் சமந்து, ஹரிணி தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சேலம் மேட்டூர் மற்றும் செஞ்சி அதனை சுற்றியுள்ள இடங்களில் செந்தில் மாறன்- கவிநாதன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனித்துள்ளனர். இசையமைத்து எடிட்டிங்கையும் டி. எஸ். திவாகர் கவனிக்க ஹிஜாஸ் அகமது பாடல்களை எழுதி உள்ளார். ராம் முருகேஷ் நடன பயிற்சியையும், ரமேஷ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கதையின் நாயகனாக கருப்பட்டி பாத்திரத்தில் நடித்து தமது மோனிதா மூவீஸ் நிறுவனம் சார்பில் ’கருப்பட்டி’ படத்தை பொழிச்சை சி. ராஜ்குமார் தயாரிக்கிறார்.

’காதல்பதிவு’, ’நந்திவரம்’, ’சினிமா கனவுகள்’, ’கொலை தூரம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது ஐந்தாவது படமாக இயக்கும் ‘கருப்பட்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

harinithakaruppattisamanthutamil movie karuppattivijayarajகருப்பட்டிசமந்துதமிழ்ப் படம் கருப்பட்டிவிஜயராஜ்ஹரிணி தா
Comments (0)
Add Comment