அறிமுக இயக்குநர் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மானிடன்’!

ஜேம்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மானிடன்’. இதில், அறிமுக நடிகர் தினேஷ் சந்திரா நாயகனாக நடிக்க, அறிமுக நடிகை சினேகா நாயகியாக நடித்திருக்கிறார்.

சேரன் ராஜ் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் ஊருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கும் ஊர் பெரியவர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றார். வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும், கண்ணபிரான் , பாஸ்கர் லட்சுமி. ராகவன்.மீசை ராஜாபோன்ற புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

சுரேஷ் ரங்கா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு செளந்தர்யன் மற்றும் லொக பத்மநாபன் இசையமைத்திருருக்கிறார்கள். ஆர்.செல்வராஜ் படத்தொகுப்பு செய்ய, வ.கருப்பன் பாடல்கள் எழுதியுள்ளார். ரத்னவேல் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். பெரு துளசி பழனிவேல் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.

இந்தப் படத்தைஜேம்ஸ் இண்டர்நே.ஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரித்திருக்கிறார். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா முதன் முறையாக இந்தப்படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ப்துக்கோட்டை மாவட்டம், குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஊட்டி, தேனி போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

manitantamil movie manitanதமிழ்ப் படம் மானிடன்புதுமுகங்கள் நடிக்கும் மானிடன்மானிடன்
Comments (0)
Add Comment