ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கும் நிகழ்ச்சிக்கு ‘செகண்ட் லவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ என்ற அடையாளத்துடன் வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறுகையில், “ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், “காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ சீசன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தை விட்டு விலகி, வாழ்க்கையில் புதிய உறவையும், புதிய காதலையும் தேடும் நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ‘செகண்ட் லவ்’ இருக்கும். உணர்வுப்பூர்வமான தருணங்கள், நம்பிக்கை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளை இணைக்கும் இந்த நிகழ்ச்சி, நவீன கால உறவுகளையும், மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலையும் புதிய கோணத்தில் வழங்க இருக்கிறது.

பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தரமான மற்றும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பனிஜாய் ஆசியா கூட்டணி. தற்போது ‘செகண்ட் லவ்’ மூலம் மீண்டும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் மூலம், நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் காதலை கொண்டாடும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியை தனது ஒரிஜினல்ஸில் இணைத்துள்ளது ஜியோஹாட்ஸ்டார்.

dating reality showramya krishnansecond loveசெகண்ட் லவ்டேட்டிங் ரியாலிட்டி ஷோரம்யா கிருஷ்ணன்
Comments (0)
Add Comment