சண்முக பாண்டியன் விஜயகாந்தின் ‘வாணவேடிக்கை’ ஆரம்பம்!

சண்முக பாண்டிய விஜயகாந்த் நாயகனாக நடிக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீ,எம்.பி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை திரு இயக்குகிறார்.

சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குந்ர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்க, பிரேம்குமார் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ராஜ்கமல் பணியாற்றுகிறார்.

முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. பிரேமதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் MP-யின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குநர்கள் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

படம் குறித்து இயக்குநர் திரு கூறுகையில், “இதுவரை நீங்கள் பார்த்திடாத சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்த படத்தில் பார்ப்பீர்கள். இப்படம் தந்தைக்கு மகனுக்குமான உணர்வை சொல்லும் ஒரு அழகிய கமர்சியல் படம். படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்புகளை படபிடிப்பு முடிந்தவுடன் அறிவிக்கிறோம்.” என்றார்.

director thirulk suthishshanmuga pandiyan vijayakanthvanavedikkaiஇயக்குநர் திருஎல்.கே.சுதீஷ் எம்.பிசண்முக பாண்டியன் விஜயகாந்த்வாணவேடிக்கை
Comments (0)
Add Comment