’சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தை தொடர்ந்து நானி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹிட் : கேஸ் 3’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டாக்டர் கொலானு இயக்கும் இப்படத்தை யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வால் போஸ்டர் சினிமா சார்பில் பிரசாந்தி திபிர்னேனி தயாரிக்கிறார்.
இப்படத்தில் நானியின் கதாபாத்திரத்தைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம் இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ’Hunter's Command’ என பெயரிடப்பட்ட கிளிப், ஒரு HIT அதிகாரி பனி மலைகளில் காரை ஓட்டுவது மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்துவது போன்ற ஒரு புதிரான குறிப்பில் தொடங்குகிறது. ஹிட் அதிகாரி ஆபத்தில் இருப்பதாக ஒரு அதிகாரி மற்றவரை எச்சரிப்பதால் நம் பதற்றம் அதிகரிக்கிறது. ஹிட் அதிகாரியே ஆபத்தானவர் என்றும் அவர் பெயர் அர்ஜுன் சர்க்கார் என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார். அர்ஜுன் சர்க்கார் கெட் செட் அண்ட் கோ என்று சொல்லும் உச்சரிப்புடன் வீடியோ முடிவடைகிறது.
நானி சுருட்டு புகைக்கும்போதும், காரை ஓட்டும்போதும் ரத்தம் தோய்ந்த கைகள் மற்றும் கோடரியுடன் ஸ்டைலாகவும், கொடூரமாகவும் தோன்றுகிறார். அர்ஜுன் சர்க்காராக அவரது சித்தரிப்பு மிரட்டல்லாக இருக்கிறது. அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் பெயர் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் போலவே சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது.
முன்னதாக ஹிட் பட வரிசையை இயக்கிய டாக்டர் சைலேஷ் கொலானு ’ஹிட் : கேஸ் 3’ படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களைத் தாண்டி இன்னும் ஸ்டைலான, பிரமாண்டமான படமாக இருக்குமென்பதை டீசர் உறுதி செய்கிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பூட்ட்டுகின்றன, அதே சமயம் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மட்டும் செய்து வரும் மிக்கி ஜே மேயர் தனது துடிப்பான இசை மூலம் டீசரின் தீவிரத்தை உயர்த்துகிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ். ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீ நாகேந்திரா தங்கா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
2025 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஹிட் தொடரின் மூன்றாம் பாகத்தில் அர்ஜுன் சர்க்காரின் கதாபாத்திரம் எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை சொல்லும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...