கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ‘குணா’ திரைப்படத்தின் பதிப்புரிமையை தாங்கள் வாங்கியுள்ளதாகவும், அதனால் படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குணா’ படத்தை மீண்டும் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, படத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கறிஞரை நியமித்து, குணா மறு வெளியீட்டின் போது திரையரங்க வசூல் தொகையை வழக்கின் பெயரில் வரவு வைக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...