கன்னட திரையுலகின் பிரபல நடிகரக்ளான ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன் முறையாக இணையும் படத்திற்கு ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ என பெயரிடப்பட்டுள்ளது. வர்க்கம் மற்றும் உணர்ச்சிகளை வலிமையுடன் எதிரொலிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதற்கான விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரமேஷ் அரவிந்த், “இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் 'புஷ்பக விமானம் ' எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது. இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.
'புஷ்பக விமானம்', 'மழைக்கால ராகம்' போன்ற படங்களை தயாரித்த விக்யாத், 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு... இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது.” என்றார்.
நடிகர் கணேஷ் பேசுகையில், “கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, 'யுவர் சின்சியர்லி ராம்' எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம் - தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜே. அனூப் சீலின் இசையமைக்கிறார். ஹரிஷ் கொம்மே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...