தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன், தற்போது முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிரஷாந்தின் ‘அந்தகன்’ திரைப்படத்தில் பலமான வேடத்தில் நடித்டு பாராட்டு பெற்றவர், திரையுலகில் தனது 28 வது ஆண்டில் அடியெத்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சிம்ரன் முதன்னை வேடத்தில் நடிக்கும் திகில் மற்றும் ஃபேண்டஸி ஜானர் திரைப்படத்திற்கு ‘தி லாஸ்ட் ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை சிம்ரனின் கணவர் தீபக் பஹா ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சுயாதீன திரைப்படங்களுக்காக புகழ் பெற்ற லோகேஷ் குமார் இயக்குகிறார்.
இதுவரை சிம்ரன் நடித்திராத வேடத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை பிடிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...