Latest News :

நடிகர் சிவராஜ் குமார் வெளியிட்ட ‘சுப்ரமண்யா’ பட முதல் பார்வை போஸ்டர்!
Sunday September-08 2024

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கரின் மகன் அத்வேயை நாயகனாக நடிக்கும் படம் ‘சுப்ரமண்யா’. எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில்  திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் தயாரிக்கின்றனர்.  ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். 

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை, பிரபல கன்னட நடிகர் டாக்டர்.சிவராஜ் குமார் வெளியிட்டார்.

 

அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது. நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

Subramanya

 

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகிறது.

 

’கே.ஜி.எஃப்’ மற்றும் ’சலார்’ புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் படத்தொகுப்பு செய்ய, ’சப்த சாகரதாச்சே’ & ’சார்லி 777’ புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Related News

10007

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery