கடந்த ஆண்டு வெளியான ‘யாத்திசை’ திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்ஐ பெற்ற நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ் வீனஸ் இன்ஃபோடைமெண்ட் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை, யோகி பாபு நடிப்பில் வெளியான ‘லக்கி மேன்’ படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் இணையத் தொடர் 'வதந்தி' மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார். குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அச்சு ராஜாமணி இசையமைக்கும் இப்படத்திற்கு ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மதன் படத்தொகுப்பு செய்ய, வாசு கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
அனைத்து வயதினரும் கண்டு ரசித்து சிரித்து மகிழும் வகையில் கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் பெருமளவு படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...