Latest News :

நடிகர்கள் ராணா மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’!
Monday September-09 2024

60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம், நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘காந்தா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

செல்வமணி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, பாக்யஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

 

இந்த படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. இதில், தென்னிந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்து படப்பிடிப்பு துவக்கி வைத்தார்.

 

இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் ராணா டகுபதி கூறுகையில், “'காந்தா'வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக 'காந்தா' இருக்கும்” என்றார்.

 

நடிகர் துல்கர் சல்மான் கூறுகையில், “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை 'காந்தா'வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு” என்றார்.

 

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், ”இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. 'காந்தா' மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்” என்றார். 

 

’காந்தா’ படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் வெளியீட்டு தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

10010

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery