தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி மொழிகள் உட்பட 200-க்கும் மேலான படங்களில் ஹீரோவாக நடித்த ரஹ்மான்,இப்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் படம் ’பேட் பாய்ஸ்’. காதல்,செண்டிமெண்ட்,ஆக்ஷன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும், காமடியோடு கலந்த ஆக்ஷன் கேரக்டரில் இதுவே முதல் தடவையாக இதில் நடித்திருப்பது சிறப்பு. தனது வழக்கமான கேரக்டரிலிருந்து மாற்றி நடித்த இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் ரஹ்மான் கூறுகையில், “’பேட் பாய்ஸ்’ பல ஆண்டுகளுக்கு பிறகு நகைச்சுவை டிராக்கில் நான் மிகவும் ரசித்து ரிலாக்ஸாக நடித்த படம். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரியஸ் வேடங்களில் நடித்து அலுத்து போன வேளையில் தான் டைரக்டர் ஓமர் இந்த கதையை என்னிடம் சொன்னார். அவரும் எழுத்தாளர் சாரங்கும் கதை சொல்லும் போதே நான் சிரித்து..சிரித்து கொண்டேதான் கேட்டேன். வயது பாரமட்சம் இல்லாமல் நம் மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம், குழந்தைத்தனம் ,ஒரு ஹீரோயிசம் இருக்கும். இது எல்லோரது மனதிலும் இருக்கும். அப்படி ஒரு கனவு உலகில் வாழ்பவர் தான் ஆண்டப்பன் என்ற ஹீரோ கேரக்டர். அவனுக்கு படிப்பு கிடையாது. ஆனால் மனதில் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் உதவுவான் என்பது தான் அவனது ஒரே தகுதி.
இது வரை நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். வித்தியாசமான உடல் மொழி, தோற்றம், செயல்பாடுகள் என எல்லாம் ஆண்டப்பனுக்கு தான். இந்த கதையும் கதாபாத்திரமும் எனக்கொரு மாற்றமாக அமைந்துள்ளது. என்ன நம்பிக்கையில் ஓமர் இந்த ஹீரோ கேரக்டருக்காக என்னை தேர்ந்து எடுத்தார் என்பது வியப்பாக உள்ளது. ஏனெனில் நான் இது நாள் வரை இப்படி ஒரு முழு நீள நகைச்சுவை படமோ, கதாபாத்திரமோ செய்ததில்லை. இதுவரை நடித்த மற்ற சினிமாக்களை விட மிகவும் ரிலாக்ஸாக இதில் நடித்தேன். எல்லோரையும் கவரும் ஒரு ஃபன் மூவி. இனி மேல் இது போன்ற காமெடி கதைகளில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். பேட் பாய்ஸ் மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது, எல்லோரும் குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.” என்றார்.
ஆல்பி ஒளிப்பதிவு செய்ய வில்லியம் பிரான்சிஸ் இசை அமைக்கிறார். போனிக்ஸ் பிரபு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...