பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கனவத்தை ஈர்த்தவர் ஷபீர் கல்லரக்கல். தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர், ‘கிங் ஆஃப் கோத்தா’, ‘நா சாமி ரங்கா’ என தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தென்னிந்தியாவின் மிக முக்கியமான நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாத் திரைப்படத்தில் ஷபீர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்ட ஷபீர், ‘கொண்டல்’ திரைப்படம் தனக்கு சவாலானதாகவும், ஆச்சரியமானதாகவும் இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படம் குறித்து கூறுகையில், ”தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய உணவுக்காக கரைக்கு திரும்புவோம். உணவு சாப்பிட்டுவிட்டு, அதே இடத்திற்குச் சென்று மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவோம். இதில் பலருக்கும் கடல் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனாலும், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் படப்பிடிப்பை சரியாக முடித்தோம். தயாரிப்பாளர்கள் எங்கள் அனைவரையும் தங்கள் குடும்பமாக கருதியதால், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தேவையான வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்தனர். என் சினிமா பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் சிறப்பான ஒன்றாக இருக்கும். என்னுடைய கம்ஃபோர்ட் ஸோனில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்து சிறப்பான நடிப்பை இயக்குநர் வாங்கியுள்ளார்.’ என்றார்.
இந்தப் படத்தைத் தவிர, ஷபீருக்கு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸின் படம் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தண்டகாரண்யம்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. இதைத் தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு தெலுங்கு திரைப்படம் மற்றும் சிவராஜ்குமாரின் கன்னடப் படமான ‘பைரதி ரணகை’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...