எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில், நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’. இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.
'கன்னிமாடம்' மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் போஸ் வெங்கட், கல்வியை மையப்படுத்திய கதைக்களத்தை கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக ‘சார்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
இனியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, பாரதி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இப்படத்தை இம்மாதம் இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...