தென்னிந்திய ரசிகர்களின் பேவரைட் நாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள நடிகை சம்யுக்தா, தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சம்யுக்தாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘சுயம்பு’ படக்குழு அப்படத்தில் சம்யுக்தாவின் கதாபாத்திரப் உகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா.
நிகிலின் 20வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்க, சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
போர் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தாகூர் மது வழங்ங்க, பிக்சல் ஸ்டுடியோஸ் மூலம் புவன் மற்றும் ஸ்ரீகர், மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முதல்தர தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளனர்.
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ’கேஜிஎஃப்’ மற்றும் ’சலார்’ படப்புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, கே.கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...