’சாக்லேட்’, ’பகவதி’, ’ஏய்’, ’வாத்தியார்’, ’மாஞ்சா வேலு’, ’மலை மலை’, ’கில்லாடி’ என தொடர்ந்து பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் அதிரடி ஆக்ஷன் கமர்ஷியல் படம் ‘தில்ராஜா’.
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio) நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடித்திருக்கிறார். ஷெரின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகன் விஜய் சத்யா, தீவிர ரஜினி ரசிகராக நடித்திருப்பதோடு, இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடலமைப்பை கொண்டு வந்திருக்கிறார். மேலும், அவருடன் இணைந்து நாய் ஒன்றும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யாவுக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக இருப்பதோடு, அவரது தனித்துவமான நடிப்பு பாராட்டும்படியும், அவருக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுக்கும் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அம்ரீஷ் இசையில், கலைக்குமார் வரிகளில், ஆண்டனிதாசன் குரலில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “சாமி குத்து...” பாடல் வெளியாகி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது.
குடும்பத்துடன் பார்க்க கூடிய மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரில்லர் ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘தில்ராஜா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இம்மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளது.
மனோ வி.நாராயணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுரேஷ் அர்ஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி பீட்டர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக மனவை புவன் பணியாற்றுகிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...