நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் அவர் ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில், முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் நேற்று (செப்.13) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழங்கினார். இதனை, சங்க செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...