எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்த ‘டான்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்தியின், அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அவருக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஸ்ரீ வர்ஷினிக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது.
சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
'டான்' படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.
ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதல் படத்திலேயே இடம் பிடித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, தனது அடுத்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ரசிகர்களும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...