’தீரன் அதிகாரம் ஒன்று’, ’அருவி’, ’கைதி’, ’ஓகே ஓக வாழ்க்கை’, ’பர்ஹானா’ உள்ளிட்ட பல கனவு படைப்புகளை பிரமாண்டமான வெள்ளித்திரை படைப்புகளாக எந்தவித சமரசமும் இன்றி தயாரித்து மிகப்பெரிய வெற்றிப் படங்களாக்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு தயாரிப்புகள் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் தரமான படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் என்று பெயர் பெற்றதோடு, திரை ரசிகர்களிடம் மதிப்பு மிக்க நிறுவனமாகவும் திகழ்கிறது.
பலவிதமான கதாபாத்திரங்களில், பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பும் நாயகனாக தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கும் நடிகர் கார்த்தியும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கும் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை கடந்து, திரை ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களாக மட்டும் இன்றி தமிழ் சினிமாவை மற்றொரு கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசோதனை படங்களாகவும் அமைந்திருக்கிறது.
அந்த வகையில், ’தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’, ‘காஷ்மோரா’, ‘ஜப்பான்’ போன்ற படங்களின் வரிசையில் மற்றொரு பிரமாண்ட படைப்பை நடிகர் கார்த்தியுடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படைக்க இருக்கிறது.
கார்த்தியின் 29 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்காக ‘டாணக்காரன்’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தேர்ந்தெடுத்துள்ளது.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த ‘டாணாக்காரன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ், தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு, டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தார்.
இயக்குநர் தமிழின் இரண்டாவது படம் எந்த மாதிரியான படமாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்ட நிலையில், தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் கார்த்தியுடன் அவர் கைகோர்த்திருப்பது ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன், இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் தலைமையிலான ஐவி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பி4யு (B4U) மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் பிரமாண்டமான படைப்பாக உருவாக உள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு ‘கார்த்தி 29’ என்ற தற்காலி தலைப்பு வைத்திருக்கும் தயாரிப்ப் தரப்பு, படத்தின் முன்னணி பணிகளை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.
‘கார்த்தி 29’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...