இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி நடித்த ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நானியும், ஸ்ரீகாந்த் ஒடேலாவும் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு ‘நானி ஒடேலா 2’ என்ற தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எல்.வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் மட்டும் இன்றி ‘தசரா’ படத்தை விட நூறு மடங்கு அதிகமான தாக்கத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் உருவாகும், என்று இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா கூறுகையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி 'தசரா' படத்தின் இறுதி காட்சி படமாக்கப்படும் போது காட்சி நிறைந்த உடன் 'கட்' என சொன்னேன். தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று மீண்டும் 'ஆக்சன்' என சொன்னேன். இதன் போது 'நானிஓடேலா 2' படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பிரத்யேக காணொளியை படமாக்கினோம். இதற்கு இடையில் 48, 470, 400 வினாடிகள் கடந்து விட்டது. ஒவ்வொரு வினாடியும் என்னுடைய அடுத்த படத்திற்கான அர்த்தமுள்ள உழைப்புக்காக செலவிடப்பட்டிருக்கிறது. எஸ் எல் பி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் நானி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், தசரா படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ' #நானிஓடேலா 2' திரைப்படம் உருவாகும் என நான் உறுதியளிக்கிறேன்.” என்றார்.
இது குறித்து நடிகர் நானி கூறுகையில், “இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு என் வாழ்க்கையில் மீண்டும் வந்து விட்டது. இதனை கண்டு தரிசிக்க தயாராக இருங்கள்.” என்றார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...