Latest News :

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான  கதை சொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த இணையத் தொடர், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. 

 

குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான 'கியாரா கியாரா' ஏற்கனவே ஜீ5-இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் ஜீ5-இல் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடராகும்.

 

உத்தரகாண்ட் மலைகளில் 'கியாரா கியாரா' கதை விரிகிறது, அங்கு யுக் ஆர்யா (ராகவ் ஜூயல்) என்ற போலீஸ் அதிகாரி, கடந்த கால போலீஸ் அதிகாரியான ஷௌர்யா அன்த்வால் (தைரிய கர்வா) உடன், மிகத்துல்லியமாக 11 மணிக்கு   நொடிகள் மட்டும் கடந்த காலத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வாக்கி-டாக்கியைக் கண்டுபிடிக்கிறார்.  15 ஆண்டுகளாக ஊரை ஆட்டிப்படைத்த அதிதி என்ற இளம்பெண்ணின் கொலை உட்படத் தீர்க்கப்படாத குற்றங்களைத் தீர்க்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக, அவர்கள் கடந்த காலத்தை மாற்றுகிறார்கள், இது நிகழ்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் கியாரா கியாரா வெளியானது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் கூறுகையில், “’கியாரா கியாரா’ தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த சீரிஸ் எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, ரசிகர்களின்  அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. ZEE5  மூலம், எங்கள் கதை இந்தியா முழுதும், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,  உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடாக, மொழித் தடைகளைத் தகர்த்து, 'கியாரா கியாரா' இன்னும் அதிகமான இதயங்களைத் தொடவுள்ளதில்,   நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்த பல மொழி டப்களை ரசிகர்கள் கொண்டாடுவதைக் காண ஆவலோடு இருக்கிறோம்.” என்றார்.

 

ராகவ் ஜூயல் கூறுகையில், “தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் இப்போது தங்கள் பிராந்திய மொழியில் ‘கியாரா கியாரா’வின் அற்புத அனுபவத்தை அதன் மாயத்தன்மை மற்றும் சிலிர்ப்பைப் பார்த்து, அனுபவிக்க முடியும் என்பதை அறிந்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சி மூளையை அதிரவைக்கும்  அதிரடி  திருப்பங்களால் நிரம்பியுள்ளது, அது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும். இந்த சீரிஸில் வாக்கி-டாக்கி கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது, கதைக்கு ஒரு புதிய பலத்தைச் சேர்க்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும், எதிர்பாரா ஆச்சரியங்கள் உங்களை வியப்பின் உச்சிக்குக் கூட்டிச்செல்லும்.   தவறவிடக்கூடாத  ஒரு அற்புதமான சீரிஸ் இப்போது ZEE5 இல் உங்கள் மொழியில்.” என்றார்.

Related News

10062

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
Saturday December-21 2024

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...

Recent Gallery