இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் ஜனா எழுதி இயக்கியிருக்கும் படம் ’இறுதி முயற்சி’. வரம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஞ்சித், மெகாலி மீனாட்சி, விட்டல் ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருகான கே.பாக்யராஜ் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
வெளியான சில மணி நேரங்களில் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘இறுதி முயற்சி’ டீசர் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்துள்ளார். வடிவேல் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பாபு எம்.பிரபாகர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மஷீக் ரஹ்மான் பாடல்கள் எழுத, அரவிந்த் கார்னீஸ் பாடல்களை பாடியுள்ளார்.
இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது , விரைவில் படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வவமாக வெளியாகும்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...