இயக்குநர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் நடிப்பில், ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் எம்.நியாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப் பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘சீரன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜேஷ்.எம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசுகையில், “இந்த சீரன் திரைப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சினிமாவுக்காக சில விசயங்கள் செய்துள்ளோம். சமூகத்திற்கு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லியுள்ளோம். என்னுடன் இணைந்து இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும், நன்றி.” என்றார்.
நடிகை இனியா பேசுகையில், “சீரன் டிரெய்லர் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். இங்கு தான் நான் பாடல்கள் முழுதாக பார்க்கிறேன். இந்தப்பாடல் நிறைய இடங்களில் ஷீட் செய்தோம், அங்காள பரமேஸ்வரி கோவில், காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி முதற்கொண்டு பல இடங்களில் ஷீட் செய்தோம். செட் போட்டும் ஷீட் செய்தோம். இப்படத்தில் பூங்கோதை எனும் பாத்திரத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப்பெண் என, மூன்று கெட்டப். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். இது உண்மையில் நடந்த கதை. ஜேம்ஸ் சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். உத்ரா புரடக்சன்ஸ் உலகமெங்கும் ரிலீஸ் செய்கிறார்கள். சமூகத்திற்கு மிக முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறோம். சோனியா அகர்வால் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். செண்ட் ராயன் ஷீட்டிங்கில் நிறைய காமெடி செய்வார். நிறையப் புதுமுகங்கள் நடித்துள்ளனர். நல்ல படம், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
பின்னணி இசையமைப்பாளர் ஜூபின் பேசுகையில், “சீரன் எனக்கு ஸ்பெஷல் மூவி, ஜேம்ஸ் எனக்கு நெருக்கமான நண்பர். அவருடன் வேறொரு படம் செய்வதாக இருந்தது. அது நடக்கத் தாமதமானதால், அவர் வாழ்வில் நடந்த ஒரு கதையைப் படமாக எடுத்துள்ளார். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோரையும் பாதிக்கும் படமாக இருக்கும். அனைவரும் இப்படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு, ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் சசிதரன் பேசுகையில், “இயக்குநர் எனக்கு நெருக்கமான நண்பர். அவர் எப்போதும் பாடல் அவருக்குப் பிடித்தால் மட்டுமே, ஓகே சொல்வார். டியூன் நன்றாக வரும் வரை விடமாட்டார், டியூன் ஓகே என்றால் கேள்வியே கேட்க மாட்டார். கு கார்த்திக் சினேகன் இருவரும் பாடல் எழுதியுள்ளனர். இருவரும் அருமையான வரிகள் தந்துள்ளார். பாடல்கள் அழகாக வந்துள்ளது. இந்த வாய்ப்புக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ஆர்யன் பேசுகையில், “அக்டோபர் 4 சீரன் வருகிறது. அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். இயக்குநர் தீ மாதிரி இருப்பார், எல்லாவற்றையும் கவனத்துடன் செய்வார். ஜேம்ஸ் அருமையாக நடித்துள்ளார். மிக நல்ல படமாக வந்துள்ளது. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகர் செண்ட்ராயன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், சீரன் மிக சீக்கிரமாகச் சீறிப்பாயும். இயக்குநர் மிக அழகாகப் படம் எடுத்துள்ளார். ஜேம்ஸ் மிக அருமையாக நடித்துள்ளார். எங்கள் எல்லோரையும் அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டார். எல்லோரிடமும் அன்பாக இருப்பார், துரை அண்ணனை என் ஆரம்ப காலகட்டங்களிலிருந்து தெரியும். எப்போதும் பரபரப்பாக இருப்பார். அதே பரபரப்போடு படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் எனக்கு டபுள் ஆக்சன், படம் நன்றாக வந்துள்ளது. எப்போதும் போல் உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகை கிரிஷா குரூப் பேசுகையில், “இந்தப்படத்தில் யாழினி எனும் ரோல் செய்திருக்கிறேன். மிக நல்ல ரோல், எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் கு.கார்த்திக் பேசுகையில், “இப்படத்தில் பணிபுரிந்தது இனிமையான அனுபவம். இசையமைப்பாளர் வாய்ப்பு தந்ததோடு, மேடையிலும் என்னை அழைத்த இசையமைப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகை சோனியா அகர்வால் பேசுகையில், “சீரன் மிக முக்கியமான விசயத்தைச் சொல்லும் படம். அதனால் தான், சின்ன ரோல் என்ற போதும், நடித்தேன். அனைவரும் இணைந்து நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
ஆடுகளம் நரேன் பேசுகையில், “ஜேம்ஸ் கார்த்திக் சார் ரைட்டர், புரடியூசர், ஆக்டர் என அசத்தியிருக்கிறார். பல படங்களில் ஊரில் ஒடுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, பின் மீண்டெழுந்து ஜெயிப்பதை பார்த்திருப்போம். ஜேம்ஸ் கார்த்திக் உண்மையில் அவர் வாழ்ந்த அந்த வாழ்வைக் கதையாக்கியிருக்கிறார். அவர் வெளிநாடு போய் சம்பாதித்து பெரிய ஆளாக ஆனாலும், மீண்டும் அவர் ஊருக்கு வந்து தான் பாதிக்கப்பட்ட கதையை எடுத்துள்ளார். இயக்குநர் துரை தனக்குச் சரியாக வரும் வரை மீண்டும் மீண்டும் எடுப்பார், ஜேம்ஸும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். படம் மிக நல்ல படமாக வரனும் என்று உழைத்துள்ளனர். இந்த டீமில் நானும் இருப்பது பெருமை. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
இயக்குநர் ராஜேஷ்.எம் பேசுகையில், “இப்படத்தின் இயக்குநர் துரை என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவருக்கு வாய்ப்பு தந்த ஜேம்ஸ் கார்த்திக்குக்கு என் நன்றிகள். என் டீமில் இருந்து ஒருவர் வந்து படமெடுப்பது மகிழ்ச்சி. துரை எப்போதும் பரபரப்பாக இருப்பார். பாடல் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. பாடலாசிரியர் பெயரைச் சொல்வதில்லை என கு கார்த்திக் சொன்னார், ஆனால் என் படத்தில் பால் டப்பா அனீஷ் கூப்பிட்டால் கூட இசை நிகழ்வுக்கு வரவே மாட்டார், நான் ஏன் சார் வரனும் எனக் கேட்பார் இதையும் பதிவு செய்கிறேன். சேது, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் சாதாரணமாக வெளியாகி, மக்களுக்குப் பத்திரிக்கையாளர்களுக்குப் பிடித்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது போல் இந்தப்படமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் துரை கே.முருகன் பேசுகையில், “முதலில் என் தயாரிப்பாளர் ஜேம்ஸுக்கு நன்றி. அவர் தந்த வாய்ப்பு தான் இயக்குநர். நான் கதைகள் வைத்துக்கொண்டு அலைந்த போது, ஜேம்ஸ் அவர் கஷ்டப்பட்ட கதையைச் சொன்னார். இன்று பலருக்கு உதவி செய்யும் நிலைக்கு வந்துள்ளார். இதே போல் இருங்கள் சார் நன்றி. இயக்குநர் ராஜேஷ் எம் சார், அவர் என்னைச் சேர்த்துக் கொண்டதால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன் நன்றி சார். இப்படத்தில் கமிட்டானவுடன் நரேன் சாருக்கு தான் போன் செய்தேன். எனக்காக நடித்ததற்கு நன்றி. இனியா மேடம் மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி அவர். செண்ட்ராயன் என் நண்பன், சின்ன பாத்திரம் எனக்காக நடித்துள்ளார். தொழில் நுட்ப குழுவில் இசையமைப்பாளர் ஜுபின், சசிதரன், மற்றும் பாடலாசிரியர் கு கார்த்திக் எல்லோரும் நண்பர்கள். மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நண்பர் பாஸ்கர் ஆறுமுகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்துள்ளார். இந்த படத்தை 30 நாளில் முடிக்க இவர்கள் தான் காரணம். சோனியா மேம் நல்ல ரோல் செய்துள்ளார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் நன்றி.” என்றார்.
அறிமுக நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இனியா, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், அஜீத், கிரிஷா குருப், செண்ட்ராயன், ஆர்யன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...