சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.
இந்த நிகழ்வில் தொடக்க விழா செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, இந்த முயற்சியின் பின்னணியில்
உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர்3, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடையும்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் தலைமை தாங்க, அவருடன் கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில், தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டரின் சிறப்பு சிறுவர்களின் நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...