நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். அமைச்சராக பல ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சிம்பு, அருள் நிதி, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ’தப்பாட்டம்’ படத்தின் போஸ்டரை உலக பணக்காரர் எலான் மஸ்க் பகிர்ந்ததை தொடர்ந்து உலகளவில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளஞ்சூரியனாக கழகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். எந்த பணியை எடுத்துக்கொண்டாலும் அதை சீறும் சிறப்புமாக செய்து முடிக்கும் வல்லமை கொண்ட உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக தமிழ்நாட்டின் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்பது உறுதி.
தமிழக மக்களின் அடையாளமாக திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சி மேன்மேலும் சிறப்பதற்காக மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அமைச்சராக மக்கள் பணியை செவ்வன செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமாறு பணியாற்றி தமிழ்நாட்டுக்கு சிறப்பு சேர்ப்பார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...