Latest News :

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் இறுதி டிரைலர் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பு தென்னிந்தியாவில் வெளியாகியிருக்கும் மிகப்பெரிய திரைப்படங்களுடன் சுமார் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பல மொழிகளில் டிரைலர் ஒளிபரப்பாக உள்ளது.

 

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்‌ஷன் என டிரைலரில் இடம்பெற்றிருக்கும் பல தருணங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

 

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

 

இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதி கெல்லி மார்செல் இயக்கியுள்ளார். படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Related News

10071

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!
Monday February-24 2025

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...

சிலம்பரசன் பாடிய ‘டீசல்’ படத்தின் 2வது தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...

’டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின்’ முதல் தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...

Recent Gallery