திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
திருப்பதி லட்டு விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த யூத் சூப்பர் ஸ்டார் நடிகர் ஆர்யன் ஷாம், “திருப்பதி லட்டில் மாமிசத்தின் கொழுப்புகள் கலந்திருக்கு என்ற செய்திகள் பார்த்ததும் மனசுக்குள் பேரிடி விழுந்தது போல வேதனையாக இருந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி ஆசியுடன் அவர்களின் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் புனிதமான பிரசாதம் அதில் கலப்படம் நடந்தது என்பது தெய்வத்தையே நிந்தித்தது போல் இருக்கிறது.” என்றார்.
‘பிரமாண்ட நாயகன்’ என்ற தலைப்பில் திருப்பதி வெங்கடாஜலபதி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் வெங்கடாஜலபதியாக ஆர்ஷன் ஷாம் நடித்து பாராட்டு பெற்றார். மேலும், இப்படத்தை பார்த்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகள், படத்தை வெகுவாக பாராட்டியதோடு, திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்த ஆர்யன் ஷாமின் நடிப்பை பாராட்டி, அவருக்கு யூத் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வழங்கி, அதற்கான சான்றிதழை வழங்கி கெளரவித்தார்கள்.
‘பிரமாண்ட நாயகன்’ திரைப்படம் யூடியுப் சேனலில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இப்படத்திற்கு எதிர்மறையான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் யூத் சூப்பர் ஸ்டார் ஆர்யன் ஷாம் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.
நரபலி கொடுக்கப்படுவதை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள திகில் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ‘அந்த நாள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சாரிபில் தயாரித்து, திகிலூட்டும் நாயகனாக நடிக்கும் ஆர்யன் ஷாம், ஒரே நேரத்தில் சாமி படத்திலும், அனைவரையும் பயமுறுத்தும் திகில் படத்திலும் நடித்து, இரண்டு விதமான மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
’அந்த நாள்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வரும் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை இப்படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்ட் மூவிஸ் சர்வதேச திரைப்பட விழா, ஐரோப்பிய திரைப்பட விழா, தாக்கூர் சர்வதேச திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா, மெடுசா திரைப்பட விழா, உலக திரைப்பட விழா சிங்கப்பூர் விருதுகள், நியூயார்க் திரைப்பட விருதுகள், அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல விருதுகளை பெற்றிருக்கும் யூத் சூப்பர் ஸ்டார் ஆர்யன் ஷாமின் ‘அந்த நாள்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...