Latest News :

ஜீவா - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday October-06 2024

கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘பிளாக்’. இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே இடம் பெறும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களை பிரமிக்க வைத்ததோடு, படத்தின் மீது வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இரண்டு முதன்மை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் படங்கள் அவ்வளவாக வெளிவராத நிலையில் அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு பார்வையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.  

 

பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் எஸ்.எஸ்.ஐ, இந்தப்படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளது.

 

பாலசுப்ரமணியின் மனதிற்குள் உருவான இந்த தனித்துவமான கதைக்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் அற்புதமான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் சாம் சி.எஸ்ஸின் வசீகரிக்கும் பின்னணி இசை ஆகியவை ஒன்றிணைந்து உயிரூட்டி இருக்கின்றன. 

 

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ என எபோதுமே வலுவான கதையை மட்டுமே நம்பி படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘பிளாக்’ படம் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால், பெரிய படங்கள் வெளியாகும் நாளில் படம் வெளியானாலும், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

10082

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery