இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, ’மார்டின்’ படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது.
ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
பாடலின் வரிகளை: - கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் - தமிழ்: விவேகா - தெலுங்கு: ஸ்ரீமணி - ஹிந்தி: ஷபீர் அகமது - மலையாளம்: விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆந்தம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.
வாசவி என்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் இணைந்து “மார்டின்” படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜுன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...