ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்த ‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே.சி.பிரபாத். அப்படத்தை தயாரித்ததோடு வில்லன் வேடத்திலும் நடித்து கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’ போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தார். தற்போது, ’கருப்பு பெட்டி’ என்ற படத்தின் கதையின் நாயகனாக நடித்து வரும் கே.சி.பிரபாத், ‘யாமம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘யாமம்’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட கே.பி.பிரபாத் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். இதை பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் பதற்றமடைந்ததோடு, உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறியதோடு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தயாரிப்பாளர் மற்றும் நடிகராக கோலிவுட்டில் வலம் வரும் கே.சி.பிரபாத், திடீர் உடல்நிலை பாதிப்பால், அவரைச் சார்ந்தவர்களும் திரையுலகினரும் வருத்தத்தில் இருந்தாலும், அவர் நாயகனாக நடித்திருக்கும் முதல் திரைப்படமான ‘கருப்பு பெட்டி’ வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது, அவர்களை சற்று ஆறுதலடைய செய்துள்ளது.
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூரன்’...