Latest News :

தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் கழிவுகள்! - ஆபத்தை உரக்க சொல்ல வரும் ‘அலங்கு’
Tuesday October-15 2024

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மையை உரக்க சொல்ல வருகிறது ‘அலங்கு’.

 

‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கும் இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மேக்னஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பிரதியை பார்த்த பிரபல விநியோகஸ்தர் பி.சக்திவேலன், தனது சக்தி பிலிம் பேக்டரி மூலம் உலகம் முழுவதும் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுவிட்டார்.

 

படம் குறித்து இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் கூறுகையில், ”நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக  மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே  திரைக்கதையின் பிரதானம். இதில், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறேன்.

 

படத்தின் 95 சதவீதம் அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம், அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை தருவதோடு, படத்தில் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான படமாகவும் இருக்கும்.” என்றார்.

 

இப்படத்தில் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருகிறது.

 

இத்திரைப்படத்தை டி.சபரிஷ் , எஸ்.ஏ.சங்கமித்ரா இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு முன் இந்நிறுவனம் ஜி.வி.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த ’செல்ஃபி’ திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது. 

 

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து, மாறுபட்ட கதைக்களம்  கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம், இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில்  ’அலங்கு’ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

எஸ்.பி.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்ய, அஜீஷ் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, பி.ஏ.ஆனந்த் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related News

10111

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!
Monday February-24 2025

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...

சிலம்பரசன் பாடிய ‘டீசல்’ படத்தின் 2வது தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...

’டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின்’ முதல் தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...

Recent Gallery