பிரபல மாடல் மோனிஷா சென் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். அவரது சினிமா வருகைக்கு பல பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
நடிகையாக அறிமுகமாவது பற்றி மோனிஷா சென் கூறுகையில், “இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிரபாஸ், என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மற்றும் காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளை என இவர்களைப் பல ஆண்டுகளாக ரசிகர்களைப் போலவே நானும் பார்த்து ரசித்து வருகிறேன். சினிமாவில் அவர்களின் அற்புதமான நடிப்பு, அர்ப்பணிப்பு, கமர்ஷியல் விஷயங்கள் என இவை அனைத்தும் தென்னிந்திய சினிமாவை பெருமை கொள்ள செய்கிறது.
இந்த சிறப்புகள் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் நானும் அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது எனக்கான நேரம்.” என்றார்.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...