மார்வெல் ஆண்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளவிலான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது.
டாம் ஹார்டியின் ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதிப் படம் அக்டோபர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வெனோம் மற்றும் விமானத்தின் மேல் உள்ள ஜெனோமார்ப் இருவரும் இருக்கும்படியான போஸ்டரும் வெளியாகியுள்ளது.
’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்திற்கான முன்பதிவுகள் அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. டாம் ஹார்டியின் பிரியமான ஆன்டி-ஹீரோ உரிமையின் கடைசிப் பாகமான ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் த்ரில்லான ஆக்ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், மார்வெலின் ஆன்டி-ஹீரோவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக விடை கொடுக்கிறது.
மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி மீண்டும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸி'ல் வருகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களும் வேட்டையாடப்பட்டு அழிவுகரமான முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.
இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா, அக்டோபர் 24, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸை' பிரத்தியேகமாக வெளியிடுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3D மற்றும் ஐமேக்ஸ் 3Dயிலும் படம் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...