விஜயின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத், கான்பிடெண்ட் பிலிம் காஃபே (CONFIDENT FILM CAFE) சார்பில் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாம்பிகா டயானா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் தலைப்பு, முதல்பார்வை போஸ்டர் மற்றும் படத்தை பற்றிய பல விபரங்களை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக கோர்த்து, இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அப்துல் மஜீத்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு கே.கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்சிவராஜ் படத்தொகுப்பு செய்ய, பைஜூ ஜேக்கப் மற்றும் இ.ஜெ.ஜான்சன் இசையமைத்துள்ளனர். நிர்வாக தயாரிப்பு பணியை மு.தென்னரசு, எம்.ரகு ஆகியோர் கவனிக்க, படைப்பு ஆலோசகராக பாஸ்கர் பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளராக் வேலு பணியாற்றுகிறார்.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...