ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 21 வது படமாகும்.
தீபாவளியை முன்னிட்டு இன்று (அக்.31) முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் ‘அமரன்’ திரைப்படம் முதல் திரையிடல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் ‘அமரன்’ சிறப்புக் காட்சியில் பங்கேற்று படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டினார்.
மேலும், படம் முடிந்தவுடன் படம் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் தயாரிப்பாளர் கலமல்ஹாசன் அவர்களை கைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியதோடு, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை குறிப்பிட்டு பாராட்டினார்.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் டிக்கென் முன்பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் பல சாதனைகள் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...