Latest News :

”பட்ஜெட் இல்லை..” - ’விஜய் 69’ படத்திற்கு இப்படி ஒரு நிலையா?
Monday November-04 2024

அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார். விஜயின் 69 வது படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் பாடல் காட்சியுடன் தொடங்கியது. ஒரு பாடல் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், அப்படம் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

மிகப்பெரிய பட்ஜெட்களில் உருவாகும் விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படத்தின் இயக்குநர்கள் மட்டும் இன்றி படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுவார்கள். ஆனால், விஜய் 69 படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தான் தற்போது வாங்கும் சம்பள தொகையை கேட்க, அவருக்கு தயாரிப்பு தரப்பு நோ, சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

தலைவா, மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கும் சத்யராஜை விஜய் 69 படத்திலும் நடிக்க அனுகியிருக்கிறார்கள்.  அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்ததால் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், அவர் சம்பளம் கேட்ட போது, எங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை, என்று சொல்லிவிட்டார்களாம். அதனால், சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

 

விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்திருக்கும் நிலையில், அவர் நடிக்கும் கடைசிப் படம் என்று சொல்லப்படும் ‘விஜய் 69’-க்கு இப்படி ஒரு நிலையா?, என்று கோலிவுட்டே அதிர்ச்சியடைந்துள்ளது.

Related News

10147

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் நட்சத்திரம் மேகா ஷெட்டி!
Monday February-24 2025

தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...

சிலம்பரசன் பாடிய ‘டீசல்’ படத்தின் 2வது தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...

’டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின்’ முதல் தனிப்பாடல் வெளியானது!
Monday February-24 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...

Recent Gallery